Sunday, March 14, 2010

ஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) "கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்" என்று நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 14:31)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் :

"நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்." அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.